News July 6, 2025
திருச்செந்தூர் குடமுழுக்கு: புனித நீர் தெளிக்க ட்ரோன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் 20 இடங்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
கடைசிநாள் போட்டி மழையால் பாதிப்பு

2-வது டெஸ்டின் கடைசிநாள் ஆட்டம் தொடங்குவதில் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவை என்ற நிலையில் ஏற்கனவே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியா வெற்றி பெற மேலும் 7 விக்கெட்கள் தேவை. ஆனால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கவில்லை என்றால் போட்டி டிராவாகவே அதிக வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு இது சாதகமான முடிவாகவே இருக்கும்.
News July 6, 2025
அடுத்த இடத்துக்கு முன்னேறும் மணிகண்டன்?

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவரான மணிகண்டன், அடுத்ததாக பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை நீலம் புரடொக்ஷன் தயாரிக்கிறது. இது நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஃபேமிலி ரோலில் நடித்துவந்த மணிகண்டன், அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News July 6, 2025
₹1,000 உரிமைத்தொகை… நாளை முதல் விண்ணப்பம்..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்ப படிவம் நாளை (ஜூலை 7) முதல் வீடு, வீடாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் வீட்டிற்கே சென்று படிவங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. படிவங்களை நிரப்பி தேவையான ஆவணங்களுடன், ஜூலை 15-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளே, ரெடியா..!