News June 22, 2024
தோல்வியால் சோர்ந்திருந்த அதிமுக மீண்டும் சுறுசுறுப்பு

மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியாலும், உள்கட்சியில் குழப்பம் நிலவுவதாக வெளியானத் தகவல்களாலும் இபிஎஸ் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சோர்ந்து போய் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தால் மீண்டும் அக்கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுகவினர் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.
News November 16, 2025
போன் திருடுப்போனால் இங்கே மீட்கலாம்!

மொபைல் போன்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ மத்திய அரசின் ‘www.sanchar saathi.gov.in’ என்ற இணையதளம் வாயிலாக மீட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை திருடுப்போன 41,229 போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் மோசடி அழைப்புகள், உங்கள் பெயரில் யாராவது சிம் கார்டு வாங்கி இருப்பதை தெரிந்து கொள்ளவும் மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம்.
News November 16, 2025
இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


