News October 2, 2025
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் பூச்சிகளை விரட்ட TIPS

மழைக்காலத்தில் எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், கரையான், சிலந்திகள், வண்டுகள் போன்ற பல பூச்சிகள் வீட்டிற்குள் வரலாம். இந்த பூச்சிகள் உணவில் விழுந்துவிடுமோ, நம்மை கடித்துவிடுமோ என்ற அச்சங்கள் தோன்றும். கவலையே வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இவற்றை நீங்கள் அகற்றலாம். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 2, 2025
திருமா திமுகவில் சேர்ந்து விடலாம்: வினோத் பி.செல்வம்

திருமாவளவன் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து விடலாம் என பாஜக மாநிலச் செயலர் வினோத் பி.செல்வம் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்த 15 பேர் பட்டியலின மக்களுக்கு சேர்த்துதான் பாஜக போராடுகிறது எனக் கூறிய அவர், கரூர் சம்பவத்தில் திமுகவுக்கு திருமா முட்டு கொடுப்பதாக விமர்சித்தார். மேலும், கரூர் துயரத்தில் உண்மையை கண்டறியும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிற்காது எனவும் தெரிவித்தார்.
News October 2, 2025
விஜய் உணர்வுப்பூர்வமாக வருந்தவில்லை: திருமாவளவன்

கரூர் துயரத்தில் உணர்வுப்பூர்வமாக விஜய் வருந்தவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவர் முகத்தில் எந்த சோகமும் தெரியவில்லை என்றும் CM ஸ்டாலினை சீண்டுவதே அவரது நோக்கமாக உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வீட்டில் இரங்கல் கூட்டத்தை கூட நடத்தாமல், மூன்று நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, கரூர் விஷயத்தில் பாஜகவினர் பேசிய பிறகே விஜய் வீடியோ வெளியிட்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 2, 2025
பெங்களூரு நகரின் டாப்-5 சுற்றுலா தலங்கள்

வீக் எண்டில் ₹1,500 பட்ஜெட்டில் எங்காவது சுற்றுலா செல்ல பிளான் பண்றீங்களா? பெங்களூரு, அதற்கு நல்ல சாய்ஸ். சென்னையில் இருந்து ரயிலில் 2S வகுப்பில் சென்றுவர ₹400 மட்டுமே கட்டணம் என்பதால், குறைந்த செலவில் பல இடங்களுக்கு செல்லலாம். குறிப்பாக சர்ச் ஸ்ட்ரீட் சென்றால் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருள்களை சீப் அண்ட் பெஸ்டாக வாங்கி வரலாம். நீங்க பெங்களூரு சென்றிருக்கிறீர்களா? உங்க யோசனை என்ன?