News September 29, 2025
உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க டிப்ஸ்!

*கிரெடிட் கார்டில், உங்கள் கடன் வரம்பை மீறி பயன்படுத்தாதீர்கள் *கடன் கட்டுவதை எப்போதும் நிறுத்திவிடாதீர்கள். Default ஆனால் கடன் பெறவே முடியாது *ஒரே நேரத்தில் பல இஎம்ஐ கடன்களை வாங்காதீர்கள் *இஎம்ஐ தவணையை உரிய காலத்துக்குள் கட்டி விடுங்கள் *அடிக்கடி உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை கவனியுங்கள் *secure loan(கார், ஹோம்) மற்றும் insecure loans(பர்சனல் லோன், கிரெடிட் கார்டு) சரியான கலவையில் இருப்பது நல்லது.
Similar News
News September 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 30, 2025
BREAKING: விஜய் வீடு திரும்பினார்

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அன்று இரவே சென்னை திரும்பினார் விஜய். கிட்டத்தட்ட 36 மணி நேரத்துக்கு பிறகு, இன்று காலை 11 மணியளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் சென்றார். அங்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நீலாங்கரை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
News September 30, 2025
‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்த படத்தில் சசிகுமார்

‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராஜேந்திரன், அடுத்ததாக சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் பிண்ணனியில் அமைக்கப்பட்ட இப்படத்தின் கதையில், சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக சசிகுமார் நடிப்பதாக தரணி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.