News March 25, 2025
எளிதில் உறக்கம் வர டிப்ஸ்…!

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.
Similar News
News March 26, 2025
டெல்லி செல்லும் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் EPS டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பிய நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு பயணமாகிறார். கூட்டணி கணக்குகள், அண்ணாமலையின் தலைவர் பதவி, தமிழக அரசியல் களம் ஆகியவை குறித்து மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசிக்கலாம் என சொல்லப்படுகிறது.
News March 26, 2025
நெட்ஃபிளிக்ஸில் சாதனை படைத்த ‘Adolescence’

பிரிட்டிஷ் கிரைம் டிராமாவான ‘Adolescence’, இதுவரை எந்த ஒரு லிமிடெட் வெப்சீரிஸும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான 11 நாள்களில், உலகளவில் 6.63 கோடி பார்வையாளர்களை அந்த வெப்சீரிஸ் பெற்றுள்ளது. வெறும் 4 எபிசோட்களே கொண்ட அந்த இணையத் தொடரானது, 13 வயது சிறுவன் செய்த கொலையை கதைக்களமாக கொண்டு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இத்தொடர் வெளியானது.
News March 26, 2025
BREAKING: UPI சர்வர் இயங்கவில்லை

பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் UPI சர்வர் செயல்படாததால், நாடு முழுவதும் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் PhonePe, Google Pay, மற்றும் Paytm பயன்படுத்துவோர், பணத்தை அனுப்பவும், பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலை பகிர்ந்து வருகின்றனர். பலருக்கும் பரிவர்த்தனை பாதியிலேயே நின்று போனதாக கூறப்படுகிறது. உங்களுக்கு இந்த பிரச்னை உள்ளதா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.