News March 25, 2025
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். 12PM – 4PM மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 4லி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள பழங்கள், இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான மதுரை HC உத்தரவை நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்றும் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
News December 5, 2025
ஸ்டைலிஷ் கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி, இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், அவரது உடை, நிற்கும் ஸ்டைல், நுட்பமான அலங்காரங்கள் என அனைத்தும் சேர்ந்து அவரை ஒரு கலைப்படைப்பு போல காட்டுகிறது. மென்மையான பார்வை, அழகான ஆபரணங்களுடன் பாரம்பரியம் கலந்த நவீன ஸ்டைலில் கலக்குகிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 5, 2025
2026-ல் 13 மாதங்களா?

இந்து மதத்தில் சூரியன்(365 நாள்கள்), சந்திரன்(354 நாள்கள்) என 2 நாள்காட்டிகள் உள்ளன. இவ்விரண்டிற்கும் 11 நாள்கள் வித்தியாசம் உள்ளதால், 3 ஆண்டுக்கு ஒருமுறை (32 மாதங்கள் & 16 நாள்கள்) ஒரு மாதம் கூடுதலாக வரும். இதை ஆதிக் மாதம் என்பார்கள். 2026 மே 17 முதல் ஜூன் 15 வரை இம்மாதம் வருகிறது. இந்த மாதத்தில் சுபகாரியங்கள் தவிர்க்கப்படும். இருப்பினும், இதனால் ஆங்கில நாள்காட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.


