News April 15, 2024
பாண்டியாவின் புகழை பாடும் காலம் வரும்

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புகழை ரசிகர்கள் பாடும் காலம் விரைவில் வருமென அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாண்டியா மீதான ரசிகர்களின் அணுகுமுறை குறித்து அவர், கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில், தனிப்பட்ட வீரரை கை காட்டுவது எரிச்சலாக உள்ளது. இந்தியாவுக்காக பாண்டியா சிறப்பாக விளையாட ரசிகர்கள் ஊக்குவிப்பதை காண காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
டி20 WC சாம்பியன் யார்? டிராவிட் கணிப்பு!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி எளிதில் செமி பைனலுக்கு செல்லும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆனால் எனது அனுபவத்தில் அடிப்படையில் சொன்னால், அந்தந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அதுவே வெற்றி பெறும். யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ODI, T20-யில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு ரோகித் ஷர்மாதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
தேர்தல் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் விருதுநகர்!

தமிழக தேர்தல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இம்மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் மறைந்த காமராஜர் முதல்வரானது 1957-ல் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று தான். அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்று தான் முத்துராமலிங்கனார் MP ஆனார். அதேபோன்று 1977-ல் அருப்புக்கோட்டை தொகுதியில் வென்று தான் எம்ஜிஆர் முதல்வராக தேர்வானார்.
News January 28, 2026
இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி எளிது: நயினார்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் 99% இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்படும். TN இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் ஆகியவை TN-லிருந்து ஏற்றுமதி செய்வது எளிதாகும் எனவும் கூறியுள்ளார்.


