News June 26, 2024
செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க அவகாசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை முடிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க பிப்ரவரியில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News September 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு: ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்துக்கு ஒரு கும்பல் திட்டமிட்டு விண்ணப்பித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாக்குகள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
News September 18, 2025
BREAKING: செங்கோட்டையன் நீக்கம்? இபிஎஸ் பதில்

செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து பேசிய EPS, ‘கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம்’ என்று விளக்கமளித்தார். அப்போது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பினர். அதற்கு, உட்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசமுடியாது என சூசகமாக பதிலளித்தார்.
News September 18, 2025
கர்சீப்பை வைத்து முகத்தை மறைக்கவில்லை: இபிஎஸ்

டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.