News August 24, 2024
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…

காதல் தம்பதியர் நயன்தாரா & விக்னேஷ் சிவன் பசுமை நிறைந்த பூங்காவொன்றில் நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது 2 குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்று பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Mine’ என்ற கேப்ஷனுடன் நயன் பதிவிட்டுள்ளார். கண்களில் காதலொழுக விக்னேஷ் சிவனை அவர் பார்க்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, லைக்ஸ்களை அள்ளியுள்ளது.
Similar News
News November 26, 2025
BIG BREAKING: விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்

அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த கே.ஏ.செங்கோட்டையன் சற்றுமுன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நாளை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில், செங்கோட்டையன் தனது அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
News November 26, 2025
6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6 மிரட்டல் அடி

சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத் கேப்டன் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் மொத்தமாக 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119* ரன்களை குவித்தார். முதலில், சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது. உர்வில் படேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம், 12.3 ஓவர்களில் குஜராத் எளிதில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரிலும், உர்வில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
News November 26, 2025
வயதாகிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

வயதாகும்போது உங்கள் சருமம், ஆற்றல் மற்றும் செல்களை பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். இதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.


