News October 24, 2024
திலகரின் பொன்மொழிகள்

* சுயராஜ்யம் என்பது எனது பிறப்புரிமை, அதை நான் பெற்றே தீருவேன்
* நமது தேசம் ஒரு மரத்தைப் போன்றது, அதன் அசல் தண்டு சுயராஜ்யம் ஆகும். அதன் கிளைகள் சுதேசி மற்றும் புறக்கணிப்பு
* கடவுள் தீண்டாமையை பொறுத்துக் கொண்டால், நான் அவரைக் கடவுள் என்று சொல்ல மாட்டேன்
* பிரச்சனையே வளங்கள் அல்லது திறன் இல்லாதது அல்ல, துணிச்சல் இன்மையே ஆகும். SHARE IT.
Similar News
News January 18, 2026
ஒரு போன் எப்போது Expiry ஆகும் தெரியுமா?

செல்போனுக்கும் Expiry date இருக்கிறது. ஆனால் அதை நிறுவனங்கள் நேரடியாக சொல்வதில்லை. போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ அதுவே போனின் Expiry தேதியாகும். இவை ஃபோன் பாக்ஸில் இருக்கும். அல்லது settings -> about -> செக்யூரிட்டியில் பார்க்கலாம். இது போன் கம்பெனியை பொருத்து மாறுபடும். சில கம்பெனிகள் ஓரிரு வருடங்களும், ஐபோன்கள் 7 வருடங்கள் வரையும் அளிக்கிறது. உங்க போனின் Expiry date பாருங்க!
News January 18, 2026
கலைத்துறையில் அரசியல் தலையீடா? CM ஸ்டாலின்

2026-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கலைத்துறையில் அரசியல் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாளம், பெங்காலி படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் ₹5 லட்சம் வழங்கப்படும் எனவும் <<18887820>>பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்<<>> அவர் அறிவித்துள்ளார்.
News January 18, 2026
தவெகவுடன் யார் யார் கூட்டணி.. செங்கோட்டையன் அறிவிப்பு

தவெகவுடன் யார் யார் கைகோர்க்கிறார்கள் என்பது வரும் 23-ம் தேதி தெரிந்துவிடும் என செங்கோட்டையன் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு எனக் கூறி கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ள போதிலும், விஜய் உடன் இதுவரை ஒரு கட்சி கூட கூட்டணி வைக்கவில்லை. இதனிடையே, வரும் 23-ம் தேதி NDA கூட்டணி, PM மோடி முன்னிலையில் முழு வடிவம் பெறவுள்ளது. அதை மனதில் வைத்தே செங்கோட்டையன் இதைத் தெரிவித்துள்ளார்.


