News November 16, 2024

கேப்டனுக்கு நன்றி தெரிவித்த திலக் வர்மா

image

SA அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-1 என வென்றது. இந்நிலையில் அடுத்தடுத்து சதமடித்த திலக் வர்மா MOTM & MOTS விருதை வென்றார். பின்னர் பேசிய அவர் ‘கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய போது நான் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனேன். ஆனால் இந்தமுறை இங்கு நான் சதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. இந்த வாய்ப்பளித்த கடவுளுக்கும், என்னுடைய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி’ என்றார்.

Similar News

News March 5, 2026

ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன்

image

Ex அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கிடைக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் வரலாம் என ஆஃபர் கொடுத்த அவர், தவெகவுக்கு சென்றுவிடுவேன் என திமுகவை மிரட்டி தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வாங்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஆஃபரை ஏற்பாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

News March 5, 2026

EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

image

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலைய விடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.

News March 5, 2026

ராஜ்யசபா வேட்பாளர் எல்.கே.சுதீஷ்: பிரேமலதா

image

தேதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதில் காங்., சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!