News April 2, 2024

புலிப்பாண்டியா? எலிப்பாண்டியா?

image

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது புலிப்பாண்டி இபிஎஸ், எலிப்பாண்டியாக இருந்தாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஏ உள்பட பல்வேறு சட்டங்களை பாஜகவுடன் இணைந்து ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதை எதிர்த்து பேசுவதாகக் கூறிய அவர், தேர்தல் காரணமாக சிறுபான்மையினர் மீது திடீரென பாசத்தை காட்டி வருவதாக காட்டமாக விமர்சித்தார்.

Similar News

News January 1, 2026

இனி வீடுகளில் பணம் வைத்திருக்க கூடாதா? CLARITY

image

புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, 2026 ஏப்ரல் முதல், வீட்டில் அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உலாவரும் செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வராது எனவும், முன்பு இருந்த சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது. அனைவரும் தெரிஞ்சுக்கணும் SHARE THIS.

News January 1, 2026

புதிய பொருளாதார கோட்பாடு அவசியம்: கவர்னர் RN ரவி

image

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்று கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பொருளாதார சங்க மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியாத பாதையில் பயணிப்பதாக தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் அளவுகோல்களை வைத்தே, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுவதாக கூறிய அவர், உண்மையான வளர்ச்சியை அறிய, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

News January 1, 2026

764 பணியிடங்கள், ₹20,000 சம்பளம்; இன்றே கடைசி

image

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) 764 சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: ஐஐடி, புவியியல், கணிதம், இயற்பியல் மற்றும் உளவியலில் பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 28. சம்பளம்: ₹19,900 – ₹1,12,400 வரை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

error: Content is protected !!