News May 22, 2024
வெயில் தாங்காமல் புலி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மக்கியா உயிரியல் பூங்காவில் ‘அம்பிகா (10) என்ற புலி நேற்று உயிரிழந்தது. நேற்று மதிய உணவுக்கு பின்னர் உறங்கிய அப்பெண் புலி, மீண்டும் எழுந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் பாம்புக்கடி காரணமாக புலி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் உடற்கூராய்வு அறிக்கையில் அதிக வெப்பம் தாங்காமல் இருதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 30, 2025
Health Tips: மழைகாலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள்

மழைக்காலத்தில் சளி, ஜுரம் எளிதில் வரும். இதனை தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, பேரிக்காய், நாவல் பழம், பப்பாளி, ப்ளம்ஸ், மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். இவை உங்கள் உடலில் நார் சத்து, நீர் சத்து, தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கூட்டுகிறது. SHARE.
News August 30, 2025
இனி விஜய் பற்றி கேட்காதீங்க.. கொந்தளித்த பிரேமலதா!

ECI, கோர்ட் இணைந்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். நெல்லையில், பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். மேலும், DMDK, TVK-வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, இனி தன்னிடம் விஜய் பற்றி எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஆவேசமாக கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News August 30, 2025
முதல்வரை விஜய் அப்படி சொல்லி இருக்கக்கூடாது: அமீர்

நடிகராக ‘அங்கிள்’ என்று சொல்வது தவறில்லை; ஆனால் ஒரு கட்சியின் தலைவராக ‘மாண்புமிகு முதல்வர்’ என அழைப்பது தான் சரி, விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். TVK மாநாட்டில் ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில், விஜயை குற்றவாளியாக சேர்த்தது போலீஸின் செயல்பாட்டை கேள்விக் குறியாக்குகிறது எனக் கூறிய அவர், ரசிகர் – விஜய் இடையேயான பிரச்சனையில் பொதுவிவாதம் தேவையில்லை என்றார்.