News July 1, 2024
ஒரு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று ரயில்களில் முன்பதிவு தொடங்கியது. அக்.28ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 -15 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்துவிட்டது. அக். 29ஆம் தேதிக்கு இன்றும், அக். 30ஆம் தேதிக்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
BREAKING: தமிழகத்தில் பஸ் விபத்து.. 6 பேர் மரணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை தென்காசி அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஹாஸ்பிடலில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
News November 24, 2025
தற்குறி Vs ஆச்சரியக்குறி: அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

தவெக தொண்டர்கள் <<18366063>>தற்குறி<<>> அல்ல, ஆச்சரியக்குறி என விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும், யாரோடும் எங்களுக்கு பகை இல்லை எனவும் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.


