News March 16, 2024
மார்ச் 18ஆம் தேதி CSK-RCB போட்டிக்கான டிக்கெட்

ஐபிஎல் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விலை ₹1,700-ல் இருந்து ₹7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என CSK நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Similar News
News December 23, 2025
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, பெறப்பட்ட கடன் தொகையானது, அடகு வைக்கப்பட்ட நகையின் மதிப்பைவிட அதிகமாக மாறுகிறது. இதனால் கடனை செலுத்துவதில் வாடிக்கையாளர்கள் சுணக்கம் காட்டுகின்றனராம். இந்நிலையில், நகையின் மதிப்பில் 60-65% வரை மட்டுமே கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி, நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது 70-72% வரை கடன் வழங்கப்படுகிறது.
News December 23, 2025
ஹாஸ்பிடலில் அதிமுக தலைவர்.. பரபரப்பு அறிக்கை

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தொற்று பாதிப்பால் அவருக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News December 23, 2025
ஒரு ATM-க்குள் எவ்வளவு பணம் இருக்கும்னு தெரியுமா?

நம் பணத்தேவையை எளிதில் தீர்த்து வைக்கும் இயந்திரமான ATM-க்குள் ‘கேஷ் கேசட்’ எனப்படும் 4 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் சுமார் 2,500 நோட்டுகள் வீதம், மொத்தம் 10,000 நோட்டுகள் வரை அடுக்க முடியும். பெட்டிகள் முழுவதும் ₹500 நோட்டுகளால் நிரப்பப்பட்டால், ₹40 லட்சம் வரை இருக்கும். ஆனால், ₹100, ₹200 என பல வகை நோட்டுகள் வைக்கப்படுவதால், சராசரியாக ₹30 லட்சம் வரை பணம் நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது.


