News April 2, 2024

ரயில் நிலையங்களில் UPI மூலம் டிக்கெட் வாங்கலாம்

image

இந்திய ரயில்வே நிர்வாகம், இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை, இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து எடுத்துக்கொள்ள முடியும். இந்த வசதியானது, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது.

Similar News

News January 23, 2026

கடைசி நேரத்தில் EPS-க்கு அதிர்ச்சி

image

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் NDA கூட்டணி கட்சித் தலைவர்களுக்கான மேடையில் பிரேமலதாவை எப்படியாவது அமர வைத்துவிட வேண்டுமென்ற முடிவில், அவரிடம் அதிமுக தரப்பு இன்று காலை வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதற்கிடையில், கூடுதல் சீட் வழங்குவதாக திமுகவும் கூறியதாம். இதனால், அதிமுக பலமுறை பேசியும் சீட் விவகாரத்தில் பிரேமலதா சமரசம் ஆகவில்லையாம். இது EPS-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 23, 2026

சற்றுமுன்: பெரும் அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

image

பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 81,537 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 241.25 புள்ளிகள் சரிந்து, 25,048 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். HDFC Bank, Eternal, ICICI Bank, Adani Enterprises உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

News January 23, 2026

திமுக ஆட்சியை அகற்ற கவுண்டவுன் ஸ்டார்ட்: மோடி

image

NDA பொதுக்கூட்டத்தில் `சகோதர, சகோதரிகளே வணக்கம்’ எனக்கூறி PM மோடி தனது உரையை தொடங்கினார். இங்கு அலைகடல் என மக்கள் திரண்டிருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதே, தேசத்திற்கே சொல்லும் செய்தியாக அமைந்துள்ளது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழக மக்கள் துடிக்கின்றனர் என்றும், ஊழல் நிறைந்த ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!