News April 3, 2024
ஏப்.5ல் CSK-KKR போட்டிக்கான டிக்கெட் விற்பனை

ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏப்.5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
News November 2, 2025
மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.


