News June 26, 2024
கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை ₹2,300

நாளை ரிலீசாகும் ‘கல்கி 2898 AD’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மும்பை ஜியோ வேர்ல்டு பிளாசாவில் உள்ள BKC திரையரங்கில், ஒரு டிக்கெட் ₹2,300க்கு விற்கப்படுகிறது. இதேபோல, LUXE வகை டிக்கெட்டுகள் ₹1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற நகரங்களில் ₹1,100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 22, 2025
கப்பற்படையில் 1,266 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய கப்பற்படையில் ‘டிரேட்ஸ்மேன்’ பிரிவில் காலியாகவுள்ள 1,266 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷிப் பில்டிங் டிரேடு, இன்ஜின் டிரேடு, மெஷின் டிரேடு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: +2. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்து & திறனறித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News August 22, 2025
சென்னை வயசு தெரியும்.. இந்த கட்டடங்களின் வயது தெரியும்?

அனைவருக்கும் பிடித்த சென்னை என்ற மெட்ராஸுக்கு இன்று 386 -வது ஹேப்பி பர்த்டே என்பதை அறிவோம். ஆனால், சென்னையின் புகழ் பெற்ற கட்டடங்களின் வயது நம்மில் பலருக்கும் தெரியாது. மெட்ராஸ் நகரம் உருவாகுவதற்கு முன்பே இதில் பல கட்டடங்கள் உருவாகிவிட்டன. அடுத்தடுத்த படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இவற்றில் உங்களின் ஃபேவரிட் இடம் எது.. கமெண்ட் பண்ணுங்க?
News August 22, 2025
BREAKING: பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்கா – அண்டார்டிகா கண்டங்களுக்கு இடையே உள்ள டிரேக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதால், ராட்சத கடல் அலைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளுக்கு தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்யா, ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.