News June 26, 2024
கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை ₹2,300

நாளை ரிலீசாகும் ‘கல்கி 2898 AD’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மும்பை ஜியோ வேர்ல்டு பிளாசாவில் உள்ள BKC திரையரங்கில், ஒரு டிக்கெட் ₹2,300க்கு விற்கப்படுகிறது. இதேபோல, LUXE வகை டிக்கெட்டுகள் ₹1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற நகரங்களில் ₹1,100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
மார்ச் 2: வரலாற்றில் இன்று

*1896–தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள் *1917–லாரி பேக்கர் பிறந்தநாள் *1918–நடிகர் ரஞ்சன் பிறந்தநாள் *1923–நடிகை சுந்தரிபாய் பிறந்தநாள் *1930–உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தி, தண்டியை நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை தொடங்கினார் *1935–குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள் *1949-சரோஜினி நாயுடு நினைவு நாள் *1963–வித்யாசாகர் பிறந்தநாள் *1968–நடிகர் டேனியல் கிரெய்க் பிறந்தநாள்
News March 2, 2026
தர்மம் VS அதர்மத்திற்கான தேர்தல்: நயினார்

உதயநிதியை CM ஆக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சி நடத்துவதாக நயினார் விமர்சித்துள்ளார். NDA மாநாட்டில் பேசிய அவர், TN-ல் பெண்கள் யாருக்குமே பாதுகாப்பில்லை என்றும், புத்தகம் தூக்க வேண்டிய மாணவர்களின் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சியே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2026 தேர்தல் களமானது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல், இதில் தர்மமே வெல்ல வேண்டும் எனக் கூறினார்.
News March 2, 2026
ஈரானின் கடற்படை தலைமையகம் அழிப்பு: டிரம்ப்

கமேனி கொல்லப்பட்டாலும் ஈரானின் முக்கிய இடங்களில் USA தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் ஆபிரஹாம் லிங்கன் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறிய நிலையில், அந்நாட்டின் 9 கடற்படை கப்பல்களை அழித்துவிட்டதாக SM-ல் டிரம்ப் கூறியுள்ளார். மற்றொரு தாக்குதலில் ஈரானின் கடற்படை தலைமையகம் பெருமளவு தகர்க்கப்பட்டதாகவும், மீதமுள்ள கப்பல்கள் கடலுக்குள் மூழ்கடிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.


