News September 13, 2024
இன்று இடி-மின்னலுடன் மழை: RMC

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். SHARE IT
Similar News
News December 27, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பொங்கல் தொகுப்பு தயாராக இருப்பதாகவும், ஜன.10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகையாக ₹5,000 வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத காந்தி, அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.
News December 27, 2025
‘புஷ்பா 2’ நெரிசல் மரணம்.. அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன் உள்பட 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திரையரங்கு நிர்வாகத்தின் அலட்சியமே, கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு, அவர்களை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்ந்துள்ளனர்.
News December 27, 2025
ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


