News May 9, 2024
15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரையிலான அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Similar News
News April 1, 2026
நகைக்கடன்.. புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்தது

<<19527096>>நகைக்கடனில்<<>> இன்று முதல் சில புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, *கடனை முழுமையாக செலுத்திய பிறகு அடமானம் வைத்த நகையை உடனடியாக (அ) 7 வேலை நாள்களுக்குள் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் ஏற்படின் வாடிக்கையாளருக்கு தினசரி இழப்பீடாக வங்கி ₹5,000 வழங்க வேண்டும். *கடன் செலுத்த முடியாத சூழலில், தங்கத்தை ஏலம் விடும் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 1, 2026
கால் செய்தால் போதும், உதவி தேடிவரும்… எப்படி தெரியுமா?

தனியாக போகும் போது பிரச்னையா? திடீர் உடல்நல கோளாறா? ‘112’ என்ற எண்ணுக்கு Call பண்ணால் போதும். Inbuilt-ஆக இருக்கும் கூகுள் Emergency Location Service மூலம், உங்களின் லொக்கேஷன் மீட்புக் குழுவினருக்கு (காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை) அனுப்பப்பட்டு விடுகிறது. உ.பி.,யில் தற்போது செயல்பட்டு வரும் இச்சேவையால், ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தமிழகத்திலும் கொண்டுவரலாம் அல்லவா?
News April 1, 2026
அதிருப்தி பாஜகவினருக்கு வலைவீசுகிறதா திமுக?

பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்காததால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை ஸ்மெல் செய்த திமுக, செந்தில்பாலாஜியை வைத்து அதிருப்தியில் இருப்பவர்களை அலேக்காக தூக்கிவர முயற்சித்து வருகிறதாம். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பெரும் பூகம்பம் வெடிக்கலாம் என அக்கட்சியினர் சொல்கின்றனர். <<-se>>#TNElection2026<<>>


