News April 27, 2024

தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

image

மக்களவைத் தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விவரம் இதோ:- 1952 – ராமலிங்க செட்டியார் (கோவை) 1957 – கணபதி நாடார் (திருச்செந்தூர்) 1962 – கிருஷ்ணமாச்சாரி (திருச்செந்தூர்). இவர்கள் 3 பேரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் கிருஷ்ணமாச்சாரிக்கு அப்போதைய பிரதமர் நேரு, மத்திய அமைச்சர் பதவி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 19, 2025

ரோபோ சங்கர் மறைவு வேதனையளிக்கிறது: தமிழிசை

image

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஜொலித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழிசை, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 19, 2025

அக்.1 முதல் ஆன்லைன் கேமிங் தடை மசோதா அமலாகிறது

image

ஆன்லைன் கேமிங் தடை மசோதா, அக்.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமலுக்கு வருவதற்கு முன்பு மீண்டும் கேமிங் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மசோதா மூலம், பணம் கட்டி விளையாடும் சூதாட்ட கேம்ஸ்களுக்கு தடை, மீறி விளையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ₹2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

News September 19, 2025

சனிக்கிழமை, சிரிச்சா போச்சு.. ரோபோ சங்கரின் நினைவுகள்

image

சிரிச்சா போச்சு, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடி மட்டுமல்ல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் கலக்கி வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர் ‘மாரி’ படத்தின் சனிக்கிழமை, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ஜாக்கெட் ஜானகிராமன், ‘விஸ்வாசம்’ படத்தின் மெரிட்டு கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தார்.RIP

error: Content is protected !!