News February 17, 2025
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் இல்லை: உதயநிதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாகவும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைசி வரையிலும் பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தார். மொழி திணிப்பை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 15, 2026
CINEMA 360: அரசன் படத்தில் அஸ்வத் மாரிமுத்து!

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கேமியோ ரோலில் நடிக்கிறாராம். இந்த கேரக்டரில் முன்னர் நெல்சன் நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது *சூர்யாவின் ‘கருப்பு’ மே 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது *கார்த்திக் சுப்பராஜ் & ராணா இணைந்து தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 12:12 மணிக்கு வெளியாகவுள்ளது *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
News March 15, 2026
BREAKING: விஜய்யுடன் கூட்டணி.. இபிஎஸ் முடிவை தெரிவித்தார்

கூட்டணியில் இணைய விஜய்க்கு 80+ சீட்கள், DCM ஆஃபரை NDA கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், தவெகவுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என EPS மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அதேநேரம், NDA-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ மறுப்பு வெளியாகவில்லை.
News March 15, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ECI அதிரடி

TN அரசு மகளிருக்கு ₹5,000 கொடுத்தது தவறில்லை என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தேதி அறிவிப்பின்போது, தமிழகத்தில் மகளிர் வங்கி கணக்கில் அரசு ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கலாம் என அவர் விளக்கம் அளித்தார். அசாமிலும் மகளிருக்கு அம்மாநில அரசு ₹9,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.


