News August 9, 2024
நடிகர் விஜய் கட்சிக்கு மூன்று கொடிகள் ரெடி?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய்தான் முடிவெடுப்பார் எனக் கூறப்படுகிறது. ‘கோட்’ படம் வெளியாகும் வரை, கட்சித்தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது. செப். 5-க்கு பிறகு, கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிகிறது.
Similar News
News November 26, 2025
JUST IN புதுவை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
EPS-க்கும் கருணாநிதியின் நிலைமைதானா?

1972-ல் MGR-ஐ திமுகவிலிருந்து நீக்கியபோது, கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் பின்னால்தான் இருந்தார்கள். அதன்பின் MGR தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவால் தேர்தலில் வென்றார். தற்போது செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, கட்சி தாவ உள்ளார். MGR உடன் ஒப்பிடமுடியாது என்றாலும், KAS-க்கு கொங்கில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.
News November 26, 2025
பேங்க் அக்கவுண்ட் இல்லாமலும் UPI-யில் பணம் அனுப்பலாம்!

வங்கி கணக்கு இல்லாதவர்களும் பணம் அனுப்பும் ‘UPI Circle: Full Delegation’ என்ற வசதியை BHIM கொண்டு வந்துள்ளது *UPI ஆப்பில், வங்கி கணக்கு உள்ள Primary Users, ‘UPI Circle’ ஆப்ஷனுக்கு செல்லவும் *அதில், வங்கி கணக்கு இல்லாத 5 பேரை Secondary User-களாக சேர்க்கவும் *Secondary User-களுக்கு ஒரு VPA ID உருவாகும் *அதன் மூலம் அவர்கள் பரிவர்த்தனை செய்யலாம் *அதிகபட்சமாக ₹15,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.


