News April 20, 2025
கோர்ட்டுக்கே மிரட்டல்.. பாஜக MP-க்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

SC-ஐ அவமதித்து பேசியதாக பாஜக MP-க்கள் <<16157597>>நிஷிகாந்த் துபே<<>>, தினேஷ் ஷர்மாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. கோர்ட்டை மிரட்டிவரும் தங்கள் கட்சி MP-க்களை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் SC-ஐ பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இது பாஜக MP-க்களின் சொந்த கருத்து என நட்டா கூறியிருந்தார்.
Similar News
News November 16, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6-ஐ தொட்டுள்ளது. நேற்று புதிய உச்சமாக ₹5.95 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. கோழித் தீவன மூலப் பொருள்களின் விலை உயர்வே, முட்டையின் விலையேற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் விலை அதிகரிப்பால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹7 முதல் ₹8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பயங்கரவாதியின் வீட்டை தகர்த்ததற்கு J&K CM கண்டனம்

டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமரின் <<18283443>>வீட்டை தகர்த்ததற்கு<<>> ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலால் ஒருவரின் கோபம் மட்டுமே அதிகரிக்கும் எனவும், இது எதுவும் இல்லாமலேயே J&K-வில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், அது எப்போதோ ஒழிந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை

<<18300654>>சபரிமலை நடை<<>> இன்று திறக்கப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்தவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி இந்த கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு விதித்துள்ளது.


