News May 23, 2024

மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

image

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தில் தாக்குதல் நடத்தவும், பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், கொலை மிரட்டல் வந்துள்ளது.

Similar News

News March 14, 2026

OPS அணியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவி!

image

OPS அணியிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவர்களுக்கு, EPS முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், ராஜ்யசபா MP தர்மர் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு மகளிர் அணியில் மாநில பொறுப்பு மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 14, 2026

TN அரசின் ₹20,000 மானியம்.. அப்ளை செய்வது எப்படி?

image

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் புதிதாக இ-ஸ்கூட்டர் வாங்க TN அரசு 20,000 வரை மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்புவோர், அரசின் <>www.tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். பின்னர், GIG Workers New Registration என்ற லிங்கை கிளிக் செய்து உங்கள் செல்போன் எண், பணிச் சான்று, ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், ஆதார் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 14, 2026

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,120 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,18,080-க்கும், கிராமுக்கு ₹140 குறைந்து ₹14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ₹2,880 குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!