News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

போப் பிரான்சிஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏப். 21-ம் தேதி மறைந்த அவரது உடலுக்கு இதுவரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் உடலுக்கு காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இதனையடுத்து, அவருக்கு இறுதி விடை கொடுக்க மத குருக்கள் தயாராகி வருகின்றனர். #RIP
Similar News
News April 26, 2025
குழந்தைகளின் சிகிச்சை முடியட்டும்.. கெஞ்சும் Pak. தந்தை!

இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால், தற்போது தன் 2 குழந்தைகளின் இதய பிரச்னையின் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ள ஒரு பாகிஸ்தானிய தந்தை தவித்து நிற்கிறார். டெல்லியில் அடுத்த வாரம் ஆப்ரேஷன் நடக்க இருக்கும் நிலையில், அவர்களை வெளியேறும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் யாராவது கொஞ்சம் தயவு பண்ணுங்க என கெஞ்சுகிறார். யாரோ செய்த தவறுக்கு, யாரோ தண்டனை அனுபவிப்பதா?
News April 26, 2025
ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
News April 26, 2025
திமுக-வின் அலட்சியத்தால் உயிரிழப்பு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.