News May 3, 2024
கஞ்சா என்று சாணத்தை விற்றவர்கள் கைது

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் சாலை பகுதியில் வாகன சோதனையின்போது, கஞ்சா பாக்கெட்டுடன் விற்ற இருவர், வாங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், அது வெறும் மாட்டு சானம் என்று தெரியவந்தது.
Similar News
News February 11, 2026
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் <<19094222>>www.tnpsc.gov.in www.tnpscexams.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலம் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
News February 11, 2026
கோழிக்கறி சாப்பிடும் போது உஷார்!

கோழி இறைச்சி பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும், அதன் சில குறிப்பிட்ட பாகங்களை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோழியின் நுரையீரல் பகுதியில் ஒட்டுண்ணிகள் இருக்கக்கூடும்; கோழியின் தீவனத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தால், அதன் தலையில் நச்சுக்கள் தேங்கியிருக்கும்; அதேபோல், கோழியின் கால்களில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இவை உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.
News February 11, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவினை கணக்கிட்டு விடுமுறைக்கு முன்பாகவே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு ரெடியாகிக்கோங்க வாண்டு பசங்களே!


