News August 20, 2024
GO BACK சொன்னவர்கள் COME BACK சொல்வார்கள்: தமிழிசை

பிரதமர் மோடியை GO BACK சொன்னவர்கள் COME BACK சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். ‘கலைஞர் 100’ நாணய வெளியிட்டு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து திமுக-பாஜக உறவு என்று சிலரால் கற்பனையாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், எத்தனை விமர்சனங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும் மோடியின் புகழை சிறிதளவும் குறைக்க முடியாது என்றார்.
Similar News
News March 26, 2026
இந்தியாவை நோக்கி வரும் 8 லட்சம் மெட்ரிக் டன் LPG

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பற்றிய வதந்திகளை நம்பி பங்க்குகளில் பொதுமக்கள் திரளவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா உறுதி செய்திருப்பதாகவும், US, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து 8 லட்சம் மெட்ரிக் டன் LPG கப்பல்கள் மூலம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 26, 2026
29-ம் தேதி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை, மார்ச் 29-ல் விஜய் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக தரப்பில் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 28-ல் சென்னையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 26, 2026
கடன் தள்ளுபடி.. புதிய தேர்தல் அறிவிப்பு

ராமதாஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல பிரிவினருக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதன்படி, *தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். *மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். *நலிவடைந்த நெசவாளர்கள் கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ராமதாஸின் வாக்குறுதி பற்றி உங்க கருத்து?


