News March 16, 2024
தேர்தலில் போட்டியிட, வாக்களிக்க முடியாதவர்கள்

1.தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள்…
*25 வயதை நிரம்பாதவர்கள்.
*வாக்காளர்கள் பட்டியலில் பெயரில்லாதவர்கள்.
*ஜாமினில் இருப்பவர்கள்.
*நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டவர்கள்.
2.வாக்களிக்க முடியாதவர்கள்…
*இந்திய குடியுரிமை அல்லாதோர்.
*பிறநாட்டு குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள். *தண்டனைக் குற்றவாளிகள். *பல வாக்காளர் பட்டியல்களில் பெயர் உள்ளவர்கள். *மனநலம் குன்றியவர்கள்.
Similar News
News November 24, 2025
திமுக உடன் கூட்டணி முறிவு.. ஏன்?

சிறிய கட்சிகளை மதிக்காததால் தான் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக ஃபார்வர்டு பிளாக் கதிரவன் விளக்கமளித்துள்ளார். திமுக பெரிய கட்சிகளையும் பணத்தை வைத்து அடிமைப்படுத்துவதாக கூறிய அவர், பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக அக்கட்சி மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், 2021 தேர்தலில் கட்டாயப்படுத்தி சூரியன் சின்னத்தில் நிற்கவைத்ததாகவும் கூறியுள்ளார்.
News November 24, 2025
BREAKING: தமிழகத்தில் பஸ் விபத்து.. 6 பேர் மரணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை தென்காசி அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஹாஸ்பிடலில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.


