News August 13, 2024
இந்துக்களை தாக்குவோர் உண்மையான முஸ்லிம் அல்ல

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச முஸ்லிம்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தை முஸ்லிம் நாடாக மாற்ற ஜமாத் இ இஸ்லாமி முயற்சிக்கிறது. நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம். இந்துக்கள் எங்கள் சகோதரர்கள். இந்துக்களை தாக்குபவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது என அவர்கள் கூறினர்.
Similar News
News April 4, 2026
பெரம்பூர் வேட்புமனுவில் மாற்றம் செய்யும் விஜய்!

திருச்சி கிழக்கில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் <<19559275>>வயது, வழக்கு தொடர்பான<<>> விவரங்கள் சர்ச்சையாக வெடித்தது. இதனால், பெரம்பூரில் அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த வேட்புமனுவில் மாற்றம் செய்து இன்று மீண்டும் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளார். இது தேர்தலில் வழக்கமான நடைமுறை தான். இதன் மூலம் பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தால் வேட்புமனு நிராகரிப்பு சிக்கல் இருக்காது.
News April 4, 2026
பாமகவுக்காக விட்டுக் கொடுத்த சசிகலா

அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கெனவே அறிவித்த விளாத்திகுளம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், வாணியம்பாடி & அரக்கோணம் தொகுதியில் அறிவித்த வேட்பாளர்களை சசிகலா வாபஸ் பெற்றுள்ளார். ஏனெனில், அந்த தொகுதிகளில் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என கூறியுள்ளார்.
News April 4, 2026
தங்கம் வாங்க சரியான நேரமா? வியாபாரிகள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஒரு வாரமாக 1 அவுன்ஸ்(28g) $4,700 என்ற சராசரியில் உள்ளது. மேலும் சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ள வியாபாரிகள் இது தங்கம் வாங்குவதற்கான தருணம் என்றும் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $23 உயர்ந்து $4,676 ஆக உள்ளது. இதேநிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் சற்று விலை உயர வாய்ப்புள்ளது.


