News March 18, 2024

தூத்துக்குடி: திமுக செயற்குழு கூட்டம்

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 20, 2026

தூத்துக்குடி: தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன்

image

விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் ஜன.11 அன்று காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கை, கால்கள் துணிகளாலும், உடல் கல் வைத்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சொத்தை பிரித்து தரக்கோரி ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் மூத்த மகனான சக்திவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணறில் வீசியதாக தெரிவித்தது அதிர வைத்துள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

தூத்துக்குடி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

image

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.

error: Content is protected !!