News April 15, 2024
நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகரிக்கும்

இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Similar News
News November 23, 2025
ராசி பலன்கள் (23.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
சுட்டிக் குழந்தை சாம் கரணுக்கு விரைவில் டும் டும் டும் ❤️❤️

சுட்டிக் குழந்தை என அறியப்படும் சாம் கரணுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த 20-ம் தேதி சாம் கரண் அவரது நீண்ட நாள் காதலியான இஸபெல்லா கிரேஸிடம் திருமண புரொப்போஸல் செய்துள்ளார். கிரேஸ் வெட்கத்தில் ஓகே சொல்ல, சாம் கரண் அவருக்கு மோதிரம் அணிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் SM-ல் வைரலாகும் நிலையில், சாம் கரண்-இஸபெல்லா கிரேஸ் காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறுகின்றனர்.
News November 23, 2025
பிரேசில் முன்னாள் அதிபர் கைது

பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டு போலீஸால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2022 தேர்தல் தோல்வியை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட வழக்கில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிறை செல்ல சில நாள்களே இருக்கும் நிலையில், போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இதனால் அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.


