News July 8, 2025
இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.*நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது. *இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. *எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
News July 9, 2025
பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.