News October 1, 2025
இந்த வார OTT ரிலீஸ்

*அமேசான் ப்ரைம்: மதராஸி (அக்.1), டவுன்டன் அபே: தி கிராண்ட் ஃபினாலே (ஆங்கிலம்) (அக்.1), காட் ஸ்டீலிங் (அக்.1)
*ஈடிவிள்: லிட்டில் ஹார்ட்ஸ்(தெலுங்கு, அக்.1).
*சன் நெக்ஸ்ட்: சாகசம் (மலையாளம், அக்.1)
*நெட்பிளிக்ஸ்: தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் (அக்.2), மிஸ்ஸிங் கிங், நைட்மேர்ஸ் ஆஃப் நேச்சர்
*நம்ம ஃபிளிக்ஸ்: ஜூனியர் (கன்னடம்)
Similar News
News October 1, 2025
விண்வெளியில் கரம் கோர்க்கும் ஹாலிவுட் ஜோடி?

ஹாலிவுட் நடிகர் <<17246269>>டாம் குரூஸ் <<>>(63), நடிகை அனா டி அர்மாஸ் (37) விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாகச விரும்பிகளான இருவரும், தங்களது திருமணத்தை புதுமையான முறையிலும், என்றும் நினைவில் இருந்து நீங்காத வண்ணம் இருக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, டாம் குரூஸுக்கு 3 முறை திருமணம் நடந்து விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.
News October 1, 2025
2018ல் USA அரசு முடங்கியது ஏன்?

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட்டில் நிறைவேறாததால், <<17883569>>USA முடங்கியுள்ளது<<>>. இதேபோல 2018-ல், 35 நாட்களுக்கு முடங்கிப்போனது அந்நாட்டு அரசு. அப்போது, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5.7 பில்லியன் டாலர் நிதியை செனட் ஒதுக்கவில்லை. இதனால், டிச.22, 2018 – ஜன.25, 2019 வரை ஷட் டவுன் ஏற்பட்டது. USA வரலாற்றிலேயே அதிக நாட்கள் இந்த ஷட் டவுன் நீடித்ததால் 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
News October 1, 2025
தங்கம் விலை உயர்விற்கு பாஜக காரணம்: அகிலேஷ் யாதவ்

தங்கம் விலை உயர்விற்கு பாஜக அரசு காரணம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தங்களது கருப்பு பணத்தை தங்கமாக மாற்றும் தங்கமயமாக்கல் முறையினால் தான், விலை உயர்வதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தையால் விலை தீர்மானிக்கப்படுகிறது என்றால், எந்த பொருளாதார விதி மற்றும் கொள்கையின் கீழ், ஆடம்பர உலோகங்களின் விலைகள் உயர்கின்றன என்பதை அரசாங்கம் வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.