News September 26, 2025

இந்த வார OTT ரிலீஸ்

image

*ஹிருதயப்பூர்வம் – ஜியோ ஹாட்ஸ்டார்
*காட்டி – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுந்தர காண்டா – ஜியோ ஹாட்ஸ்டார்
*தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் – பிரைம்
*ஓடும் குதிரை சாடும் குதிரை – நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்
*சுமதி வளவு – ஜீ5

Similar News

News September 26, 2025

சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படுமா?

image

ஆசியக் கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தானை வீழ்த்திய பின், அரசியல் தொடர்பான கருத்துகளை சூர்யகுமார் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ICC-யிடம் புகார் அளித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நேற்று சூர்யாவிடம் விசாரணை நடத்தினார். இதில் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 26, 2025

டிரெண்டியான மடோனா செபாஸ்டியன் PHOTOS

image

பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமீபத்தில், லியோவில் விஜய் தங்கையாக மிரட்டினார். மடோனா நடிகை மட்டுமல்லாமல், அருமையாக பாடகியும் தான். இவரது, லேட்டஸ்ட் போட்டோஸ் மேலே உள்ளன. டிரெண்டியாக அசத்தும் மடோனாவை பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க.

News September 26, 2025

தலைவருக்கான பண்பு EPSயிடம் இல்லை: ஆ.ராசா

image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிச்சைக்காரன் என்றும், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவர் எனவும் EPS பேசியது அநாகரிகத்தின் உச்சம் என ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் EPS-க்கு இல்லை என்றும் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை பார்த்துவிட்டு முகத்தை மூடியபடியே வந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் எனப் பேசுவது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!