News October 16, 2025
இந்த வார OTT ரிலீஸ்.. ரெடியா மக்களே!

தீபாவளி & வார விடுமுறையை கொண்டாட, அரை டஜன் படங்கள் OTT-ல் வெளியாகவுள்ளன *தண்டகாரண்யம்(தமிழ்) & மாயபுத்தகம்(தமிழ்)- Simply South *தணல்(தமிழ்)- அமேசான் ப்ரைம் *முதல் பக்கம்(தமிழ்)- ஆஹா *Final Destination(ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் *கிஷ்கிந்தபுரி(தெலுங்கு)- Zee5 *மிராஜ்(மலையாளம்)- Sony Liv *We live in time(ஆங்கிலம்)- Lionsgate play. மேலும், தமிழில் தீபாவளி ட்ரீட்டாக 3 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன.
Similar News
News October 16, 2025
அங்கீகாரம் இல்லாத ORS-க்கு தடை!

WHO அங்கீகாரம் இல்லாத ORS தயாரிப்புகளுக்கு முழுமையாக தடை விதித்து FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல பிராண்டுகள், குளுக்கோஸ் இல்லாத பானங்களை ORS எனக் கூறி போலியாக விற்று வந்ததால், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. WHO-வின் படி, 6 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் உப்பு, ஒரு லிட்டர் சுத்தமான நீர் மட்டுமே கலவையில் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை அல்லது உப்பு, பழப் பொடிகள் சேர்க்கக்கூடாது.
News October 16, 2025
ஊராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.5 உடன் நிறைவுற்றது. இவ்வாறு பதவிக்காலம் நிறைவடைந்த 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2026, ஜன.5 வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்தார். இது நாளை நிறைவேற்றப்படவுள்ளது.
News October 16, 2025
இந்தியாவின் டாப்-7 கோடீஸ்வர கோயில்கள்

இந்தியாவில் எண்ணற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. இதில், நிகர மதிப்பு, ஆண்டு வருவாய் அடிப்படையில் டாப்பில் இருக்கும் கோயில்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? விவரங்களை SWIPE செய்து பார்ப்பதோடு, இந்த கோயில்களில் நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா எனவும் கமெண்ட் செய்யவும்.