News October 2, 2025

எதிர்ப்பு சக்திக்கு இந்த தேநீர் போதும்!

image

எதிர்ப்பு சக்திக்கு காலையில் இந்த மூலிகை தேநீர் பருகும் படி, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு, எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து, தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, மூலிகை தேநீர் தயாரித்து பருகலாம். இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *இரவில் மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம். SHARE.

Similar News

News October 2, 2025

Cinema Roundup: SK ஜோடியாக நடிக்கும் ரஷ்மிகா மந்தனா

image

*’மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாகிறது. *சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். *விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா 2’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

News October 2, 2025

இந்திய அணியின் பிளேயிங் 11

image

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் ரெட்டி அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியா பிளேயிங் 11 : கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.

News October 2, 2025

BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

image

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 குறைந்து ₹10,880-க்கும், சவரனுக்கு ₹560 குறைந்து ₹87,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 10 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!