News May 31, 2024

நாளை நமக்கும் இந்த நிலை வரலாம்

image

வட மாநிலங்களில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராடி வருகின்றனர். அங்கு, லாரி ஒன்றில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைப்புகள் மூலம், நீண்ட வரிசையில் நின்று மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தண்ணீரை சிக்கனமாக சேமிக்காவிட்டால் நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

Similar News

News September 8, 2025

பெர்சனலாக மறக்கமுடியாத பயணம் இது: CM

image

முதலீடுகளை ஈர்த்து தமிழகம் திரும்பிய CM ஸ்டாலின், ஜெர்மனி & இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதால் இது மாபெரும் வெற்றிப்பயணம் என தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில், 1000 ஆண்டுகள் பழமையான Oxford பல்கலையில், பெரியார் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருந்ததாகவும், பெரியார் பேரனாக இது தனக்கு பெர்சனலாக மறக்கமுடியாத பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

மூலிகை: பருப்பு கீரையும்.. பல நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பருப்புக் கீரையை அரைத்து கொப்புலங்களின் மேல் பூசினால், அவை மறைந்து உடல் குளுமையடையும்.
*இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் சரியாகும்.
*தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி குணமாகும். SHARE IT.

News September 8, 2025

உணவு பொருள்களின் விலை உயர்கிறது

image

வீட்டிலிருந்து ஈசியாக உணவு ஆர்டர் செய்துவந்த மக்கள், இனி மீண்டும் பையை எடுத்துக் கொண்டு கடைகளுக்கு செல்ல தொடங்கி விடுவார்கள். ஆம், ஏற்கனவே <<16424726>>உணவு டெலிவரி<<>> ஏஜெண்டுகளான ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்றவை தங்களது சேவை கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன. இத்துடன் தற்போது இந்த சேவைகளை GST-ல் சேர்த்து 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் டெலிவரியின் விலை உயர்கிறது. நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!