News March 22, 2025
ரயில்களில் இரவு 10 மணிக்கு மேல் இதை செய்யக்கூடாது

ரயில் பயணத்தில் இரவு 10 மணிக்கு மேல் சிலவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். இரவு 10 மணிக்கு பிறகு, ரயில்களில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பேசவோ, வீடியோ பார்க்கவோ, பாட்டு கேட்கவோ கூடாது. விதிகள் மீறப்படும்போது, சம்பந்தப்பட்ட பயணிகள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News March 23, 2025
CSK VS MI: இதுவரை ஆதிக்கம் செலுத்தியது யார்?

IPL-ன் எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த சீசன்களில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணியின் கையே ஓங்கி இருந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 37 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், 20 முறை மும்பையும், 17 முறை சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
News March 23, 2025
ரஷ்யாவின் ட்ரோன் மழை.. தாக்குதலில் மூவர் பலி

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் உக்ரைனை முழுமையாக அழித்தே தீருவேன் என ரஷ்யா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கீவ்வில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உக்ரைன் அனுப்பிய 147 ட்ரோன்களில் 97 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.
News March 23, 2025
ரோபோ சங்கர் பேரனுக்கு கமல் வைத்த தமிழ் பெயர்..

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவும் பிகில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணமாகி, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கமலின் தீவிரமான ரசிகரான ரோபோ குடும்பத்துடன் அவரை நேரில் சந்தித்தார். அப்போது குழந்தையை கொஞ்சி விளையாடிய கமல், ‘நட்சத்திரன்’ என்று பெயர் சூட்டினார்.