News October 27, 2024

தவெக மாநாட்டிலா இப்படி நடக்கணும்.. சோதனை

image

தவெக மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியே குலுங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது விக்கிரவாண்டி தவெக மாநாடு நுழைவாயில் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பாரத்த போது, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 லேப்டாப் மற்றும் ஹேண்ட்பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Similar News

News January 15, 2026

சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

image

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.

News January 15, 2026

அர்னால்டு CM ஆகியிருப்பார்: கார்த்தி சிதம்பரம்

image

திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு எப்போதோ தமிழ்நாடு CM ஆகியிருப்பார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்குக்காக தான் படங்களை மக்கள் பார்ப்பார்கள் எனவும், தமிழகத்தில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் பார்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

இன்று ஜல்லிக்கட்டில் இதை செய்தால் ₹2 லட்சம் பரிசு

image

அவனியாபுரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கினால் ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தோட்டா’ என்ற அந்த காளையை அடக்கும் காளையருக்கு இந்த பரிசு கிடைக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க மாநிலத் தலைவர் முடக்கத்தான் மணி இதனை அறிவித்துள்ளார். இதனால், வாடிவாசலில் துள்ளி வரும் காளையை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!