News April 11, 2024
இந்த கேவலம் இங்கு தான் நடக்கிறது!

டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறையை மதுப் பாட்டில்களை சேமித்து வைக்கும் குடோன்களைப் பாதுகாக்க நிறுத்தும் கேவலம் இங்கு தான் நடக்கிறது என்றார்.
Similar News
News February 1, 2026
வழக்கத்தை விட ஏமாற்றம் தந்த பட்ஜெட்: மு.க.ஸ்டாலின்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட், வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். TN நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள் என எந்த பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை என சாடியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 41% ஆக தொடருவது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
தைப்பூசம்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

தைப்பூச நாளான இன்று, முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புகழ்பெற்ற முருகன் கோயில்களுக்கு படையெடுத்தனர். அவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். நாளை காலைதான் பலரும் பணியிடங்களுக்கு செல்ல உள்ளனர். இதனால், நாளை குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படுமென கருதும் மக்கள், விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து அரசு எதுவும் அறிவிக்கவில்லை.
News February 1, 2026
Budget 2026: எந்த துறைக்கு எவ்வளவு நிதி?

போக்குவரத்து- ₹5,98,520 கோடி, பாதுகாப்பு- ₹5,94,585 கோடி, ஊரக மேம்பாடு- ₹2,73,108 கோடி, வேளாண்- ₹1,62,671 கோடி, கல்வி- ₹1,39,289 கோடி, சுகாதாரம்- ₹1,04,599 கோடி, நகர்ப்புறம்- ₹85,522 கோடி, IT- ₹74,560 கோடி, தொழில்- ₹70,296 கோடி, சமூகநலன்- ₹62,362 கோடி, அறிவியல்- ₹55,756 கோடி, வரி நிர்வாகம்- ₹45,500 கோடி, வெளியுறவு- ₹22,119 கோடி, நிதித்துறை- ₹20,649 கோடி, வடகிழக்கு மாநில மேம்பாடு- ₹6,812 கோடி.


