News December 13, 2024

ஈ சாலா கப் RCBக்கு தான்: ரெய்னா

image

‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொரு வருடமும் சொல்லி வரும் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னாவிடம், விராட் கோலி ஏன் தற்போது வரை கோப்பையை வெல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “2025 ஐபிஎல் கோப்பையை கோலி வெல்லுவார்” என பதில் அளித்தார். அவரது இந்த வார்த்தை துவண்டு போய் இருக்கும் ஆர்சிபி-க்கு சற்று ஆறுதலை அளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.

Similar News

News March 21, 2026

வேட்பாளர்களின் சமூக வலைதள விவரங்களை கேட்கும் ECI

image

வேட்புமனுவில் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (SM) கணக்கு விவரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. மேலும், டிவி, ரேடியோ, SMS, SM-களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு ஊடகச் சான்றிதழ் & தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள் SM உள்பட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசார செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்.

News March 21, 2026

தவெக கூட்டணி… கடைசி நேரத்தில் மாற்றம்

image

TN சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. தவெகவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும், ராமதாஸும் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டனர். இதனால், அந்த இருவரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணியை பேசி முடித்துவிட்டதால், தவெக வரும் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துவிட்டதாம்.

News March 21, 2026

கரூரில் ஜன நாயகன் ஷூட்டிங்கா? தவெக பதில்

image

கரூர் அசம்பாவிதத்தின்போது ‘ஜன நாயகன்’ பட ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சில <<19420433>>வீடியோக்கள் <<>>வைரலாகி ஹாட் டாபிக்காக மாறியது. இந்நிலையில், அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு அங்கு ஷூட்டிங் நடந்ததா என்பது தெரியும் என்று CTR நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புரோக்கர்கள் ஏதாவது பேசுவார்கள் என்ற அவர், இந்த விஷயத்தை தாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!