News April 29, 2025
இந்த பாக். பெண் மட்டும் இந்தியாவில் இருப்பார்!

காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
தோனியும் பவுமாவும் ஒன்று: ஏபி டி வில்லியர்ஸ்

தோனியின் கேப்டன்சி பற்றி SA வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியது வைரலாகிறது. கேப்டன்சியை கையாள்வதை பொறுத்தவரை டெம்பா பவுமா, தோனியை போன்றவர் என அவர் கூறியுள்ளார். தோனி எப்படி அமைதியாகவும், அதிகம் பேசாதவராகவும், அவர் பேசும்போது அணியின் வீரர்கள் எப்படி கவனிப்பார்களோ, அப்படித்தான் பவுமாவும் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். தோனியின் பெஸ்ட் கேப்டன்சி மொமண்ட் எது?
News November 28, 2025
பலதார மணம் செய்தால் 10 ஆண்டு சிறை!

அசாமில் ஆண்கள் பலதார மணம் செய்வதை தடுக்க பலதார மண தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அசாம் அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கும் என்றும், பலதார மணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க உதவும் எனவும் அசாம் CM தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 28, கார்த்திகை 12 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூசம் ▶சிறப்பு: மைதுலாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்.


