News October 4, 2025
இந்த மாதம் செம ட்ரீட் இருக்கு

வானியல் ஆர்வலர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் செம ட்ரீட் காத்திருக்கிறது. விண்கற்கள், சூப்பர் மூன், நட்சத்திரங்கள், வீண் மீன்கள் என ஏராளமான நிகழ்வுகளை இந்த மாதத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னென்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. ஏலகிரி, ஜவ்வாது, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளில் இந்த நிகழ்வுகளை காணலாம். நீங்க ரெடியா?
Similar News
News October 5, 2025
ராசி பலன்கள் (05.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 5, 2025
கொதிக்கும் ரோஹித் ரசிகர்கள்

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கு, அவரின் ரசிகர்கள் SM-ல் கொதித்தெழுந்துள்ளனர். இந்திய அணி 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக கோப்பை வெல்லாமல் இருந்தது. ரோஹித் வந்தபின் 8 மாதங்களில் ஒரு தோல்வி கூட அடையாமல் 2 ICC கோப்பைகளை வென்றது. இந்திய கேப்டன்களிலேயே ODI-யில் அதிக வெற்றிவீதம் வைத்திருக்கும் ரோஹித்தை நீக்க ஒரு காரணம்கூட சொல்ல முடியாது என்று கொதிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News October 5, 2025
குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து

7 முதல் 15 வயது குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுள்ளது. இந்த தள்ளுபடி அடுத்த ஒரு வருடம் அமலில் இருக்கும். இதன் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் இலவசமாக சேர்க்கலாம். இதற்கு முன், இந்த விவரங்களை முதல்முறை சேர்ப்பதற்கு மட்டும் இலவசம் என்று இருந்தது. அதேபோல், கடந்த அக்.1 முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மேற்கூறிய விவரங்களை சேர்க்க ₹125 செலுத்த வேண்டும்.