News May 15, 2024
இதனால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது: அமித்ஷா

தோல்வி உறுதியானதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க விரும்பாமல், தேர்தலைப் புறக்கணித்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. காந்திநகரின் களநிலவரங்களை பாஜகவினரிடம் கேட்டறிந்தபோது, பல சந்தேகங்கள் நீங்கின. NDA கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்” என்றார்.
Similar News
News November 26, 2025
சற்றுமுன்.. விலை மொத்தம் ₹5,000 உயர்ந்தது

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. நேற்று(நவ.25) கிலோவுக்கு ₹3,000, இன்று ₹2,000 என மொத்தம் ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹176-க்கும், கிலோ ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த 2 நாள்களில் மட்டும் 3% உயர்ந்து 1 அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், வரும் நாள்களில் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
News November 26, 2025
லாபத்துக்காக கட்சி ஆரம்பித்த விஜய்: தமிழருவி மணியன்

மக்களுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், வீடு, வாகனம் என ஒப்பேறாத திட்டங்களை விஜய் விளம்பரப்படுத்துவதாக தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார். விஜய் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக கட்சி ஆரம்பித்தவர் அல்ல எனவும், தனலாபம் ஈட்ட கட்சியை ஆரம்பித்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ்வை அருகில் வைத்து கட்சி நடத்துவதே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 26, 2025
கோச் சொல்லத்தான் முடியும், வீரர்கள்தான் விளையாடணும்..

இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கோச்சை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என கம்பீருக்கு ஆதரவாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அறிவுரை வழங்குவதே கோச்சின் வேலை, வீரர்கள் தான் விளையாட வேண்டும் என கூறிய அவர், கம்பீர் தனது வேலையை சரியாகவே செய்கிறார் என குறிப்பிட்டார்.


