News April 14, 2024
இதனால்தான் ஹீரோக்கள் என்னுடன் நடிப்பதில்லை

பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளியாவதை சில நடிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு வந்த பட வாய்ப்புகள் என் திறமையால் வந்ததே தவிர வேறு காரணங்கள் இல்லை. மகளிர் உரிமை, அதிகாரத்தை வலியுறுத்தும் கதைக்களங்களில் நான் நடிப்பதால், என்னுடன் சேர்ந்து நடிக்க முன்னணி ஹீரோக்கள் விரும்புவதில்லை” எனக் கூறினார்.
Similar News
News November 24, 2025
நீலகிரி வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்

குன்னூர் நகரில் 1978 ஆண்டு நவம்பர் மாதம் இதே 24 தேதி பகல் நேரத்தில் வரலாறு காணாத அளவில் சுமார் 2 மணி நேரத்தில் 500 மி.மீட்டர் மழை பெய்தது . அதில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. மார்க்கெட் , வி.பி. தெரு , கிருஷ்ணாபுரம் , பரசுராமன் தெரு , வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது . 500 கடைகள் நீரில் முழ்கின. நீலகிரி வரலாற்றில் நவம்பர் 24 தேதி மறக்க முடியாத நாளாகும்.
News November 24, 2025
உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
இது நியாயமா கவுதம் கம்பீர்?

எவ்வித காரணமும் இன்றி வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றுவதாக ரசிகர்கள் சாடுகின்றனர். கடந்த 7 இன்னிங்ஸில் அவர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட்டில் ஒன் டவுன் வீரராக இறங்கி சரியான டெக்னிக்குடன் சுழலை எதிர்கொண்ட சுந்தர், கவுஹாத்தி டெஸ்ட்டில் 8-வது வரிசையில் இறங்கினார். அடிக்கடி chop & change செய்வது வீரர்கள் மனதில் இன்செக்யூரிட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


