News October 13, 2025

இதற்காகவே 3 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு

image

2025-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, ஜோயல் மொகிர்(USA), பிலிப் ஆகியான்(FRA), பீட்டர் ஹோவிட்(UK) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசில் ஒரு பாதி ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சி காரணிகளை அடையாளம் கண்டதற்காக’ மொகிருக்கும், இன்னொரு பாதி ‘படைப்பாக்க அழித்தல் மூலம் நீடித்த வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கியதற்காக’ ஆகியான், ஹோவிட் இருவருக்கும் கூட்டாகவும் பகிர்ந்தளிக்கப்படும்.

Similar News

News January 7, 2026

ராஜபாளையத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

image

ராஜபாளையம் பாரதிநகரைச் சோ்ந்தவா் கல்லூரி மாணவர் ஹரிஹரன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முனியராஜ் என்பவருக்கும் முன் பகை இருந்த நிலையில் நெசவாளா் குடியிருப்பு அருகே ஹரிஹரன் சென்றபோது வழிமறித்த முனியராஜ், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தெற்கு காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

தவெகவில் அடுத்தடுத்து இணைந்தனர்

image

KAS வரவுக்கு பிறகு தவெக புதுபலம் பெற்றிருக்கிறது. அவர் நகர்த்தும் காய்களால்தான் திமுக, அதிமுக, பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவுக்கு வருகின்றனர். சேலம் Ex MLA பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், புதுச்சேரி Ex பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, வைத்திலிங்கம் (OPS), பெரியசாமி (அதிமுக) போன்ற பலரும் இணைவார்கள் என பேசப்படுகிறது.

News January 7, 2026

பொங்கல் பரிசு.. அரசு அதிகரித்தது

image

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 தொகையை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை நாளை (ஜன.8) CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லாமல், தமிழகம் முழுவதும் ஜன.8 – 12 வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.13 வரை ஒரு நாள் நீட்டித்து பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!