News January 7, 2025

பிரணாப் முகர்ஜி நினைவிடம் இங்குதான் வரப்போகிறது

image

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க, டெல்லி ராஜ்காட் வளாகத்தில் மத்திய அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. இதற்காக முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதைகள் கேட்டு பெறக்கூடாது, தானாக வழங்கப்பட வேண்டும் என தனது அப்பா எப்போதும் கூறுவார் எனவும், அதேபோல் கேட்காமலேயே இதை செய்த பிரதமரின் கருணை, தங்களது மனதைத் தொட்டதாகவும் நெகிழ்ந்துள்ளார்.

Similar News

News January 21, 2026

‘துரந்தர் 2’ பட டீசருக்கு ‘A’ சான்றிதழ்

image

₹1,000+ கோடி வசூலை ஈட்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘துரந்தர்’ படத்தின் 2-ம் பாகம் குறித்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என 2-ம் பாகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 1:48 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டீசருக்கு CBFC, ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. யாருக்கெல்லாம் ‘துரந்தர்’ படம் பிடிச்சிருந்தது?

News January 21, 2026

5 மாநில தேர்தலால் IPL தாமதமாகிறதா?

image

IPL 2026 மார்ச் 26-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை அட்டவணை வெளியிடப்படவில்லை. இதற்கு WB, TN உள்ளிட்ட 5 மாநில தேர்தலே காரணம் என்றும், தேர்தல் தேதியை ECI அறிவித்த பிறகே அட்டவணையை இறுதிசெய்ய IPL நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரேநேரத்தில் தேர்தலுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது சிக்கல் என்பதால் 18 நகரங்களில் IPL-ஐ நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாம்.

News January 21, 2026

BREAKING: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

image

OPS ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், OPS விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் OPS-ம் திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!