News October 27, 2024

T20 ஃபைனல் குறித்து தோனி கூறியது இதுதான்

image

எப்போதும் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை கடைசி பந்து முடியும் முன் போட்டி முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார். “T20 இறுதிப்போட்டியை நண்பர்களுடன் பார்ததுக்கொண்டிருந்தேன். இரண்டாவது பேட்டிங் நடக்கும்போதே போட்டி முடிந்துவிட்டதாக எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால், நான் முழு போட்டியையும் பார்த்தேன். எனது கணிப்பே சரியாக இருந்தது” என கூறியுள்ளார்.

Similar News

News January 20, 2026

லஞ்சம் பெற்றதற்கு CM உடந்தையா? அண்ணாமலை

image

அமைச்சர் KN.நேருவுக்கு எதிராக ED மூன்றாவது அறிக்கை சமர்ப்பித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு CM கொடுப்பதற்கு 2 விளக்கங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், ஒன்று ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என சொல்லவேண்டும் (அ) இதற்கு தானும் முழு உடந்தை என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சியின் நிர்வாகம் சீரழிந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

News January 20, 2026

BREAKING: கூட்டணி முடிவு.. விஜய்க்கு அதிர்ச்சி

image

பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள <<18905172>>நிதின் நபினுக்கு<<>>, TTV தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது NDA கூட்டணியில் அமமுக இணைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, தவெகவுடன் அமமுக கூட்டணி வைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக NDA பக்கமே TTV பார்வை மாறியிருப்பதால், விஜய் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

News January 20, 2026

ஆயுள் காப்பீடு எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்

image

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது, பலரும் எவ்வளவு தொகைக்கு அதனை எடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. அதனை தீர்க்க ஈஸி கணக்கு ஒன்று உள்ளது. உங்களின் ஆண்டு வருமானத்தை விட ஆயுள் காப்பீடு 10 மடங்கு இருக்க வேண்டும். அதாவது, ஆண்டு வருமானம் ₹10 லட்சமாக இருந்தால், ₹1 கோடிக்கு காப்பீடு எடுக்க வேண்டும். ஒருவரின் இறப்பிற்கு பின், குடும்பம் பொருளாதாரச் நெருக்கடியில் சிக்காமல் தடுக்க ஆயுள் காப்பீடு உதவும்.

error: Content is protected !!